பாப்பாநாடு அருகே உள்ள நெம்மேலி (வடக்கு தெரு) கிராமத்து இளைஞர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவும், தங்களது உடற்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பாப்பாநாடு எம்.எம்.ஏ மேல்நிலைப்பள்ளியின் முத்து மாரி அம்மன் அறக்கட்டளை சார்பில் நெம்மேலி (வடக்கு தெரு) இளைஞர்களுக்கு சுமார் 35 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் மூவேந்தர்.செல்வராஜ், தாளாளர் மற்றும் செயலாளர் எஸ்.சஞ்சய், பொருளாளர் எஸ்.சுகன், இயக்குநர்கள் நல்லாசிரியர் கே.துரைராஜன், எஸ்.சரத், எஸ்.ஸ்ரீநாத், ஜி.பரத் பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.நாகரத்தினம், பயிற்சியாளர் ரஞ்சித் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
